11.திருப்புகழ் 106.நெருவூர் ( நெரூர்)
கரூருக்கு அருகில் உள்ளது நெரூர் என்னும் நெருவூர். இது அருணகிரிநாதர் தரிசித்துப் பாடிய 106வது தலம். இது அகண்ட காவிரிக்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர். இங்கு அக்னீஶ்வரர் என்ற பெயரில் அமைந்த சிவன் கோயில் இருக்கிறது. வேறு விவரம் தெரியவில்லை. அருணகிரி நாதர் இங்கு பாடிய ஒரு திருப்புகழ் இருக்கிறது. ஆனால் அதில் அக்னீஶ்வரர் பற்றிய குறிப்பு இல்லை.
pic.from http://padugai.com/
நெரூரில் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரரின் ஜீவசமாதி இருக்கிறது. உடல், உலகம் பற்றிய நினைவே இல்லாமல் அவதூதராக வாழ்ந்த இவருடைய வாழ்க்கை பல அதிசயச் சம்பவங்கள் நிறைந்தது. ஆன்மீக வளத்தையும் மன அமைதியையும் தரும் இடமாக இந்த ஜீவ சமாதி இருக்கிறது.
நெரூர் திருப்புகழ்-
திருவடி மறவாமை
குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண மணியணி கணபண விதகர
குடில செடிலினு நிகரென வழிபடு குணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியும்
அளக மெனவள ரடவியில் மறுகியு
மகர மெறியிரு கடலினில் முழுகியு முழலாமே
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலு நனவிலு மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
மருது நெறிபட முறைபட வரைதனில்
உரலி னொடுதவழ் விரகுள இளமையு மிகமாரி
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை யிடவல மதுகையு நிலைகெட
வுலவில் நிலவறை யுருவிய வருமையு மொருநூறு
நிருப ரணமுக வரசர்கள் வலிதப
விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு மருகோனே
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
குடக தமனியு நளினமு மருவிய
நெருவை நகருறை திருவுரு வழகிய பெருமாளே.
குரு என்ற நிலையிலும், சீடன் என்ற நிலையிலும், சீடனுக்கு அடியவன் என்ற நிலையிலும்.
சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள படக்கூட்டங்கள் உடைய பாம்புபோன்ற வளைந்த குண்டலினி யோக நிலையிலும்,
மனம் அடங்கி உன்னையே வழிபடும் நற்குண சீலர்கள் கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தலும், போற்றுதலும், விழுந்து வணங்குதலும், பக்திப் பரவசத்தால் அழுதலும் இல்லாத நான்,
நல்ல குணம் ஏதும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை தரும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், ஸ்திர புத்தி இல்லாதவன்,
பெண்களின் மயக்கில் உழன்று அலைச்சலுறாமல்.
வயலூர்ப்பதியில் நீ மயில்மேல் வந்து அளித்ததான நறுமணம் மிக்கபலவித வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன்.
உருவம் பெரியதாக பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருத மரம் தாம் செல்லும் வழியில் முறிந்துவிழ, அதனால் நீதி வெளிப்பட,
மலைபோன்ற உரலுடன் தவழ்ந்து சென்ற வல்லமையுடைய இளமை அழகையும், வலுத்த மழை பொழிய பசுக்களின் துயர் நீங்க நெருங்கிய கோவர்த்தன மலையைக் குடையாய்ப்பிடிக்க வல்ல கருணைமிகுந்த வலிமையையும்,
நிலைதடுமாற, உலவுதற்கு இடமில்லாத பாதாள அறையில் (வசுதேவர், தேவகிக்காக ) விஶ்வரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும்.
ஒப்பற்ற அரசர்கள் (துரியோதனாதியர் ) நூறு பேரும் போர்க்களத்தில் உற்ற மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ஜுனனது தேரை முன்பு செலுத்தின அடியார்க்கு எளிமையாக இருக்கும் தன்மையையும் பற்றி,
எல்லாப் பூமிகளும் புழ்ந்து பேசும் திருமாலின் இனிய மருகனே,
ஒளிவீசும் சங்குகளும் வயல்களும் நெடுகப் பரந்துள்ளனவும்,
மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை நகரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
நீ வயலூரில் அளித்த பாத தரிசனத்தை கனவிலும் நனவிலும் மறவேன்.
இங்கே அருணகிரிநாதர் வயலூரில் கண்ட முருகனின் பாத தரிசனத்தைப் பற்றிச் சொல்கிறார். பாகவத, மஹாபாரத நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். அரிய பாடல்.
107.வெஞ்சமாக்கூடல்
கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்
அழகாகும் மக்கள் அடவுகொண்டு அம்பொன் அருளாதி என்று
எழுகாதலால் தமிழ் பாடிய சுந்தரர்க்கு ஈந்த ஒரு
மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே.
இங்கு ஸ்வாமிபெயர் விகிர்தநாதேஶ்வரர், கல்யாண விகிர்தேஶ்வரர். அம்பாள் விகிர்தநாதேஶ்வரி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை. புராணத்தொடர்புடையது. இக்கோயில் 60களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு திரும்பவும் கட்டப்பட்டது.
சுந்தரர் தேவாரம் (7ம் திருமுறை )
தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

நெரூரிலிருந்து வெஞ்சமாக்கூடலுக்கு வருகிறார் அருணகிரிநாதர். இது அவர் தரிசித்துப் பாடிய 107வது தலம். இது கொங்கு நாட்டில் உள்ள 7 பெரிய சிவஸ்தலங்களில் ஒன்று. வெஞ்சமாங்கூடலூர் என்று சொல்கின்றனர். இரு ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறிய ஊர். சிவபிரான் சுந்தரருக்குப் பொற்காசு தந்த இடம். இதை கொங்குமண்டல சதகப்பாடல் ஒன்று ரசமாகத் தெரிவிக்கிறது.
கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்
அழகாகும் மக்கள் அடவுகொண்டு அம்பொன் அருளாதி என்று
எழுகாதலால் தமிழ் பாடிய சுந்தரர்க்கு ஈந்த ஒரு
மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே.
இங்கு ஸ்வாமிபெயர் விகிர்தநாதேஶ்வரர், கல்யாண விகிர்தேஶ்வரர். அம்பாள் விகிர்தநாதேஶ்வரி, மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை. புராணத்தொடர்புடையது. இக்கோயில் 60களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு திரும்பவும் கட்டப்பட்டது.
சுந்தரர் தேவாரம் (7ம் திருமுறை )
தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.
http://vaiyan.blogspot.com
இங்கு அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்
நல் அறிவு பெற
வண்டுபோற் சாரத் தருள்தேடி
மந்தி போற் காலப் பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் துடனாடிச்
சிந்தை மாய்த்தேசித் தருள்வாயே
தொண்டரால் காணப் பெறுவோனே
துங்கவேற் கானத் துறைவோனே
மிண்டராற் காணக் கிடையானே
வெஞ்சமாக்கூடற் பெருமாளே.
வண்டுகள் தேனை நாடுவதுபோல நான் உன் அருளை நாடவும், குரங்குகள் மரக்கிளைகளைத் தாண்டுவது போல நான் எமனுடைய பாசக்கயிற்றைத் தாண்ட வல்லவனாகும்படியும், செண்டாயுதம் பகையை மாய்ப்பதுபோல நான் பாசங்களுடன் போராடி ஜெயிக்கவும், என் மனதை நீ மாய்த்து மெய்யறிவை அருள்வாயே ! அடியார்களுக்குக் காட்சி யளிப்பவனே! தூய திருவேற்காடு என்னும் தலத்தில் அமர்ந்திருப்பவனே! ஆணவம் மிக்கவர்களால் காண இயலாதவனே! வெஞ்சமாக்கூடலில் வீற்றிருக்கும் பெருமாளே ! மெய்யறிவை அருள்வாயே ! எளிய, இனிய பாடல்!
108.புகழிமலை
Pic. from YouTube
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 108வது தலம் புகழிமலை.அகண்ட காவிரிக்கரையில் இருக்கிறது. இங்கு பாலதண்டாயுத ஸ்வாமி கோயில்கொண்டுள்ளார். ஒரு திருப்புகழ்ப் பாடல் இருக்கிறது.
மயில்மேல் வந்தருள
மருவுமலர் வாசமுறு குழலினாலும்
வரிவிழியினாலு மதியாலும்
மலையி னிகரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர் வகையாலும்
கருதுபொருளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி அலைவேனோ
கமலபத வாழ்வுதர மயிலின் மீது
கருணையுடனே முன் வரவேணும்
வரிவிழியினாலு மதியாலும்
மலையி னிகரான இளமுலைக ளாலு
மயல்கள்தரு மாதர் வகையாலும்
கருதுபொருளாலு மனைவிமக வான
கடலலையில் மூழ்கி அலைவேனோ
கமலபத வாழ்வுதர மயிலின் மீது
கருணையுடனே முன் வரவேணும்
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முநி ராசர் தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக வளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை யெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
புகழிமலை மேவு பெருமாளே
அமரர்முநி ராசர் தொழுவோனே
அகிலதல மோது நதிமருவு சோலை
அழகுபெறு போக வளநாடா
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை யெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
புகழிமலை மேவு பெருமாளே
இது எளிய பாடல். கமல பத வாழ்வு என்கிறார். முருகனின் தாமரை மலர்போன்ற திருவடி தான் நல்வாழ்வு தரும். " இரு தாளில் உற்ற பெருவாழ்வு " என்னும் கருத்து இங்கு மீண்டும் வருகிறது. அகஸ்தியர் புகழும் புகழிமலை என்கிறார். இந்த வரலாறு தெரியவில்லை.
No comments:
Post a Comment