10.திருப்புகழ். 105.கருவூர் (கரூர்)
அருணகிரிநாதர் தரிசித்துப்பாடிய 105வது தலம் கருவூர். இன்று கரூர் எனப்படுகிறது. தமிழ்நாட்டின் சரித்திரப் புகழ்பெற்ற நகரங்களில் இது ஒன்று.ஒரு காலத்தில் சேரர்களின் தலைநகராக வஞ்சி என்ற பெயரில் வழங்கியது.சோழர்கள், கங்கர்கள்,விஜயநகரம், மதுரை நாயக்கர்கள், மைசூர் திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சிகளின் கீழ் இருந்தது.ஆதிபுரம். கர்பபுரம், திருஆனிலை, பசுபதீச்சுரம், கருவாய்ப்பட்டினம், வஞ்சுளாரண்யம்,வித்துவக்கோட்டம். முடிவழங்கு சோழபுரம், பாஸ்கரபுரம், கரபுரம் , சேரமாநகர், ஷண்மங்கள க்ஷேத்ரம் என்று இப்படிப் பலபெயர்கள் உடைய பழைய ஊர். ஆதிபுரம் என்பது இதன் தொன்மையைக் குறிக்கிறது. அருணகிரிநாதர் ஒரு பாடலில் இதை 'கெர்ப்பபுரம்' என்று கூறுகிறார். இது அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இந்த ஆற்றுக்கு அன்னபூரணி என்ற பெயர் வழங்கியது.
இது பல புராண வரலாறுகளுடன் தொடர்புடையது. காமதேனு வழிபட்டு ப்ரம்மாவின் படைப்புத் தொழிலைப் பெற்ற தலம். ஆனதால் கருவூர் ஆநிலை எனப் பெயர்பெற்றது. இது கொங்கு நாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடமாதலால் 'கொங்கு மண்டல சதகம்' இதைப் போற்றிப் பாடுகிறது:
வீழுஞ்சடையார் பசுபதி ஈச்சுரர் வெண்ணெய்மலை
சூழும் புகழொடு தோற்றிய நாடொழும் தர்சிக்க நீ
ராழுங்கடல்புவி அண்டமெலாமுற வண்டர் தொழ
வாழும் பசு வுற்பவமான துங்கொங்கு மண்டலமே.
படம்: ஹரே க்ருஷ்ணா இயக்கம்.
கொங்கு நாட்டில் உள்ள 7 பெரிய சிவத் தலங்களில் இதுவும் ஒன்று. ஸ்வாமி பெயர் கல்யாண பசுபதீஶ்வரர், பசுபதி நாதர், பசுபதீஶ்வரர்,
ஆனிலையப்பர்.அம்பாள் க்ருபாநாயகி,ஸௌந்தர்ய நாயகி, அலங்காரவல்லி. சம்பந்தர் பாடல்பெற்ற தலம். குலசேகர ஆழ்வார் பாடிய வித்துவக்கோட்டம்மான் இத்தலத்தில் உள்ள விஷ்ணுமூர்த்தியாகும்.
panoramic view of Pasupatheeswara temple
By User:Durai velumani - Own work by the original uploader, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=52501693
சம்பந்தர் பாடல்- கருவூர் ஆனிலை
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.
கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
.
இத்தலத்தில் அருணகிரிநாதர் பாடிய 6 அரிய பாடல்கள் இருக்கின்றன.
சிவஞான பரயோகம்
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியே நித்திலமே என் நினைவே நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே கருவூரிற் பெருமாளே.
எத்தனை அருமையான பாடல்! "சிவஞான பரயோகம்" சிவஞான மாகிய உயர்ந்த யோகம், அல்லது உயர்ந்ததாகிய சிவஞான யோகம் வேண்டுகிறார் !
இது எப்படி வரும்? இதற்கு மதியும் சிறக்கவேண்டும், மனதும் தூய்மையடையவேண்டும் அப்போது சிவஞானத்தில் மனது பதியும்.
மதியால் வித்தகனாகி, மனதால் உத்தமனாகி - இது மனப்பாடம் செய்யவேண்டிய அருமையான வரி. தற்காலத்தில் கல்வியறிவு வளர்ந்துவிட்டதாகக் கருதுகிறோம். அதிகம்பேர் கல்வியில் வித்தகனாகிவிட்டார்கள். ஆனால் அதிகம் படித்தவர்கள்தான் அதிகப் போக்கிரித்தனமும் செய்கிறார்கள். கல்வியறிவு விரிந்து வளர்ந்ததாகக் கருதப்படும் இக்காலத்தில், எல்லாவிதமான குற்றங்களும் அதிகரித்தே வருகின்றன. இதற்குக் காரணம் நல்ல குணங்கள் வளரவில்லை. Modern education does not foster ethical or moral values- everything is centered on economic and political power. முன்பு "Qualities of head and heart " என்று சொல்வார்கள். இன்று மனப்பண்பாட்டை யாரும் கவனிப்பதில்லை. உத்தம மனது இல்லாத இடத்தில் மதி விபரீதமாகிறது."மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி" என்னும் இந்த அறிவுரை எவ்வளவு பொருத்தமானது!
அநுபூதி பெற
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப் பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத் தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித் தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத் தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத் துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப் பெருமாளே.
இந்த உடலை தலைமுதல் கால்வரை ஒரு ஒப்பனை போன்று மாமிசத்திரள் மூடியிருக்கிறது.
பசு, பாசம் என்னும் அஹங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு, ஞாநத்தால் அறியப்படும் பூரணமானதும், உருவமில்லாததுமான ,
பதி பாவனையான கடவுள் தியானத்தால், பரம்பொருள் அனுபூதி பெற்று, மறுபடியும் மாறாமல் அந்த நிலையிலேயே என்னைச் சேர்த்து அருள்வாயாக.
கயிலை ஈசனின் புதல்வனே ! கிழக்கில் தோன்றும் அருணோதயம் போன்ற ஒளியுடையவனே ! முத்தமிழ்க் கடவுளே !
உள்ளம் கசிபவர்களின் மனதில் ஊறும் அமிர்தமே! பிரம்மனுக்கு மைத்துனன் முறையில் உள்ள வேளே !
கருணாகரனே!சற்குரு மூர்த்தியே ! மேற்கில் உள்ள கருவூரில் அமர்ந்த
அழகுப் பெருமாளே !
நான் அனுபூதியில் நிலைக்குமாறு அருள்வாயக!
ஆம், அருணகிரி நாதருக்கு இத்தகைய அனுபூதி கிடைத்ததென்பதை அவரே தெரிவிக்கிறார் :
"ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி
அநுபூதி அடைவித்ததொரு பார்வைக் காரனும் ......
மேதகு குறத்தி திருவேளைக்காரனே "
என்று திருவேளைக்காரன் வகுப்பில் பாடுகிறார்!
Balaji [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
திருவடியான உயர்வாழ்வு !
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய பெருமாளே.
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற இனிதாள்வாய்
இதை பதம் பிரித்துக்கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.
வெற்றிப் புகழ்தரு கருவூரினில் மேவிய பெருமாளே !
நித்தம் பிணிகொடு மேவிய காயமிது
அப்பு, ப்ருத்வி, வாயு, தேயுவும்
நில் பொன் ககன மொடுமாம் இவை பூத கலவை மேவி
நிற்கும்; (இந்த உடல் பஞ்சபூதச் சேர்க்கையினால் ஆனது)
உலகாளவும், மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடும்
நெட்டுப் பணிகலை பூண் இட்டு நான் எனும் மட ஆண்மை
எத்தித் திரியும் (இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் ஆளவேண்டும் என்னும் ஆசை; பல அணிகளையும் கர்வத்துடன் அணிந்து நான் என்னும் அஹங்காரத்துடன் திரியும்)
இது ஏது பொய்யாதென உற்றுத் தெளிவுறாது
மெய் ஞானமொடு இச்சைப்பட அறிவுறாது
பொய் மாயையில் உழல்வேனை, (இது பொய் என்பதை உணராது, நிலைத்திருக்கும் என நம்பி, உண்மையை உணர விரும்பாமல் பொய் மாயையில் அலைவேனை)
எத்திற்கொடு நினது அடியாரொடும் உய்த்திட்டு
உனதருளால் உயர் ஞான அமுது இட்டு,
திருவடியாம் உயர்வாழ்வுற இனி அருள்வாயே!
(தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியாரொடு சேர்ப்பித்து, உன் அருளால் ஞான அமுதத்தைத் தந்து, உன் திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி அருள்வாயே !)
யாக்கை நிலையாது, கடவுள் திருவடியே உயர்ந்த வாழ்வு என்னும் கருத்தைஅழுத்திச் சொல்கிறார்.
பிழையே பொறுத்து உன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே
என்று வேறொரு பாடலிலும் சொன்னார்.
விதியை நினைத்து வாழவேண்டும்
வஞ்சியில் அமரர் சிறை மீட்டருள் பெருமாளே
வஞ்சிமா ந்கரில் அமர்ந்த பெருமாளே !
தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே !
சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை முடிசூடித்
தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல்கீதங்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை யுணராரே
துன்ப சரித்திரத்தைக் கொண்ட பிற தேசத்தவர்களூம், மந்திரிகளும், இளம் வீரர்களைக்கொண்ட படைத்தலைவர்களும், கஷ்ட நிலையில் இருந்த அரசர்களும் தொழுது நிற்க, ஆக்ஞை செலுத்தவல்ல (சக்ரவர்த்தி என்னும்) திருமுடியைச் சூடி,
பல்லக்கு, யானை,குதிரை ஆகியவற்றின் மீது அமர்ந்து, ஒப்பற்ற வெள்ளைக்குடையில் செல்பவராய், பெருமைபெற்ற , செல்வச் சிறப்பு பெற்ற பாக்ய நிலையில் இருந்து,
குஞ்சம் வீச, கர்வத்துடன் பஞ்சணைமேல் வீற்றிருந்து, ஊது கொம்புகள், குழல்கள் ஆகிய வாத்யங்களின் இசையொலி பெருக,
நறுமணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களைப்பார்த்து, இவை நன்று என மனம் மகிழும் ராஜாக்கள், பிரம்மன் தனது கணக்கின்படி எழுதியுள்ள யமன் தரப்போகின்ற துன்பங்களை அறிகின்றாரில்லையே !
மஹாபாரதம்
இந்தப்பாடலின் இறுதி நான்கு அடிகளில் மஹாபாரதக் கதையினை மிக அழகாகச் சொல்கிறார்.
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிட அயலேபோய்ப்
பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிரு வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட இசையாநாள்
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
யுந்தினன் மருக வயலூர்க்குக.........
பஞ்ச பாண்டவர்கள், கெட்ட செயலைக்கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவரும் சகுனியைக்கொண்டு ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும்,ஊர்களையும் தோற்றுப்போனதால் நாட்டைவிட்டு வேறிடத்துக்குச் சென்று.
தமது பழவினையை நினத்து,பன்னிரண்டு வருஷம் அங்கே காலம் கழித்து,
பல விதத்திலும் மறைந்து அஞ்ஞாத வாசமாய் இருந்து, இறைவன் திருவருளால்,
சபத நாள் 13 ஆண்டுகளும் முடிவுபெற, கவரப்பட்ட பசுக்களை மீட்டபின்,
முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலக்கு வந்த பின்பு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, அதற்கு துரியோதனன் இணங்காத போது,
அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, அர்ஜுனனுடைய தேரின் குதிரையைச் செலுத்தின திருமாலின் மருகனே ! வயலூர்க் குகனே !
மஹாபாரதக் கதையை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட்டார் !
க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சாரதியாய் அமர்ந்ததை இன்னொரு கருவூர்ப் பாடலிலும் சொல்கிறார் :
நரனுக் கமைத்த கொடி இரதச்சுதக் களவன்
அறைபுட்ப நற்றுளவன்
அர்ஜுனனுடைய ஹனுமக்கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், வெண்ணெய் திருடி, தேனுள்ள மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்தவன்..
இப்படி நம் நாதர் ராமாயண, மஹாபாரத நிகழ்ச்சிகளையும் ராம, க்ருஷ்ண அவதாரங்களையும் அனேக இடங்களில் போற்றிப் பாடுவார்.
By Ssriram mt - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=51539514
சொரூப தரிசனம்
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட
அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
நின்றன வ்யாத்தமும் வயலியி ல் வஞ்சியில் மேற்பயில்
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே
எங்கும் நிறைந்த பரமேஶ்வரன் இந்த்ரன் உய்யும் பொருட்டு அருளின சரவணபவனே ! அறிவுத் தெளிவும் வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்கள் உள்ளவனே !
போராடிய க்ரௌஞ்ச மலையை ஊடுருவிச்செல்லும் படி எறிந்த திருக்கை வேல் கொண்டு போர்க்களத்தில் நடனம் செய்யும் மயிலில் ஏறியவனாய்,
அனைவரும் பயப்படும் படியாக அக்ரமத்தையும், விகடத்தையும் பயங்கரத்தையும் தந்த ராக்ஷஸ அஸுரர்களின் அஹங்காரம் அழிய, கொடியில் விளங்கிய கோழி கூவ,
தேவர்கள் எல்லோரையும் ஆட்கொள்ளவும், தேவர்களின் இடமாகிய பொன்னுலகில் மீண்டும் அவர்களைக் குடியேற்றிவைக்கவும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டியருளிய பெருமாளே !
உன்னுடைய எங்கும் நிறைந்துள்ள தன்மையையும் கீர்த்தியையும், வயலூரிலும் வஞ்சியிலும் பொருந்தியுள்ள உனது சொரூபத்தை இரவும் பகலும் மறக்கமாட்டேன்.
இப்படி 6 அருமையான திருப்புகழ்ப் பாடல்கள் அமைந்த தலம் கருவூர்.

["தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தி இரு காலால் எழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றி நரம்பாலாற் கை யிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம்" என்று அலங்காரத்தில் சொல்வார்.}இந்த உடலை வைத்துத் தடுமாறுதல் இல்லாத நாள் ஒன்றுகூட இவ்வுலகத்தில் இல்லை.. இப்படிச் சஞ்சலமான உடலை உடைய நான்,
பசு, பாசம் என்னும் அஹங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு, ஞாநத்தால் அறியப்படும் பூரணமானதும், உருவமில்லாததுமான ,
பதி பாவனையான கடவுள் தியானத்தால், பரம்பொருள் அனுபூதி பெற்று, மறுபடியும் மாறாமல் அந்த நிலையிலேயே என்னைச் சேர்த்து அருள்வாயாக.
கயிலை ஈசனின் புதல்வனே ! கிழக்கில் தோன்றும் அருணோதயம் போன்ற ஒளியுடையவனே ! முத்தமிழ்க் கடவுளே !
[முருகன் "உததியிடை கடவுமர கதவருண குலதுரக உபலளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயமென "ஒளிவீசுவான் ]சகல ஆகம வித்தகனே ! தூயவர்கள் வாழும் வயலூரில் வீற்றிருப்பவனே!
உள்ளம் கசிபவர்களின் மனதில் ஊறும் அமிர்தமே! பிரம்மனுக்கு மைத்துனன் முறையில் உள்ள வேளே !
கருணாகரனே!சற்குரு மூர்த்தியே ! மேற்கில் உள்ள கருவூரில் அமர்ந்த
அழகுப் பெருமாளே !
நான் அனுபூதியில் நிலைக்குமாறு அருள்வாயக!
ஆம், அருணகிரி நாதருக்கு இத்தகைய அனுபூதி கிடைத்ததென்பதை அவரே தெரிவிக்கிறார் :
"ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி
அநுபூதி அடைவித்ததொரு பார்வைக் காரனும் ......
மேதகு குறத்தி திருவேளைக்காரனே "
என்று திருவேளைக்காரன் வகுப்பில் பாடுகிறார்!
Balaji [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
திருவடியான உயர்வாழ்வு !
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய பெருமாளே.
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற இனிதாள்வாய்
இதை பதம் பிரித்துக்கொண்டால் பொருள் எளிதில் விளங்கும்.
வெற்றிப் புகழ்தரு கருவூரினில் மேவிய பெருமாளே !
நித்தம் பிணிகொடு மேவிய காயமிது
அப்பு, ப்ருத்வி, வாயு, தேயுவும்
நில் பொன் ககன மொடுமாம் இவை பூத கலவை மேவி
நிற்கும்; (இந்த உடல் பஞ்சபூதச் சேர்க்கையினால் ஆனது)
உலகாளவும், மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடும்
நெட்டுப் பணிகலை பூண் இட்டு நான் எனும் மட ஆண்மை
எத்தித் திரியும் (இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் ஆளவேண்டும் என்னும் ஆசை; பல அணிகளையும் கர்வத்துடன் அணிந்து நான் என்னும் அஹங்காரத்துடன் திரியும்)
இது ஏது பொய்யாதென உற்றுத் தெளிவுறாது
மெய் ஞானமொடு இச்சைப்பட அறிவுறாது
பொய் மாயையில் உழல்வேனை, (இது பொய் என்பதை உணராது, நிலைத்திருக்கும் என நம்பி, உண்மையை உணர விரும்பாமல் பொய் மாயையில் அலைவேனை)
எத்திற்கொடு நினது அடியாரொடும் உய்த்திட்டு
உனதருளால் உயர் ஞான அமுது இட்டு,
திருவடியாம் உயர்வாழ்வுற இனி அருள்வாயே!
(தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியாரொடு சேர்ப்பித்து, உன் அருளால் ஞான அமுதத்தைத் தந்து, உன் திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி அருள்வாயே !)
யாக்கை நிலையாது, கடவுள் திருவடியே உயர்ந்த வாழ்வு என்னும் கருத்தைஅழுத்திச் சொல்கிறார்.
பிழையே பொறுத்து உன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே
என்று வேறொரு பாடலிலும் சொன்னார்.
விதியை நினைத்து வாழவேண்டும்
வஞ்சியில் அமரர் சிறை மீட்டருள் பெருமாளே
வஞ்சிமா ந்கரில் அமர்ந்த பெருமாளே !
தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே !
சஞ்சல சரித பரநாட்டர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை முடிசூடித்
தண்டிகை களிறு பரிமேற்றனி
வெண்குடை நிழலி லுலவாக்கன
சம்ப்ரம விபவ சவுபாக்கிய முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல்கீதங்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை யுணராரே
துன்ப சரித்திரத்தைக் கொண்ட பிற தேசத்தவர்களூம், மந்திரிகளும், இளம் வீரர்களைக்கொண்ட படைத்தலைவர்களும், கஷ்ட நிலையில் இருந்த அரசர்களும் தொழுது நிற்க, ஆக்ஞை செலுத்தவல்ல (சக்ரவர்த்தி என்னும்) திருமுடியைச் சூடி,
பல்லக்கு, யானை,குதிரை ஆகியவற்றின் மீது அமர்ந்து, ஒப்பற்ற வெள்ளைக்குடையில் செல்பவராய், பெருமைபெற்ற , செல்வச் சிறப்பு பெற்ற பாக்ய நிலையில் இருந்து,
குஞ்சம் வீச, கர்வத்துடன் பஞ்சணைமேல் வீற்றிருந்து, ஊது கொம்புகள், குழல்கள் ஆகிய வாத்யங்களின் இசையொலி பெருக,
நறுமணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களைப்பார்த்து, இவை நன்று என மனம் மகிழும் ராஜாக்கள், பிரம்மன் தனது கணக்கின்படி எழுதியுள்ள யமன் தரப்போகின்ற துன்பங்களை அறிகின்றாரில்லையே !
மஹாபாரதம்
இந்தப்பாடலின் இறுதி நான்கு அடிகளில் மஹாபாரதக் கதையினை மிக அழகாகச் சொல்கிறார்.
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றிட சகுனி கவறாற்பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிட அயலேபோய்ப்
பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிரு வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட இசையாநாள்
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
யுந்தினன் மருக வயலூர்க்குக.........
பஞ்ச பாண்டவர்கள், கெட்ட செயலைக்கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவரும் சகுனியைக்கொண்டு ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும்,ஊர்களையும் தோற்றுப்போனதால் நாட்டைவிட்டு வேறிடத்துக்குச் சென்று.
தமது பழவினையை நினத்து,பன்னிரண்டு வருஷம் அங்கே காலம் கழித்து,
பல விதத்திலும் மறைந்து அஞ்ஞாத வாசமாய் இருந்து, இறைவன் திருவருளால்,
சபத நாள் 13 ஆண்டுகளும் முடிவுபெற, கவரப்பட்ட பசுக்களை மீட்டபின்,
முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலக்கு வந்த பின்பு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, அதற்கு துரியோதனன் இணங்காத போது,
அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, அர்ஜுனனுடைய தேரின் குதிரையைச் செலுத்தின திருமாலின் மருகனே ! வயலூர்க் குகனே !
மஹாபாரதக் கதையை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட்டார் !
க்ருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சாரதியாய் அமர்ந்ததை இன்னொரு கருவூர்ப் பாடலிலும் சொல்கிறார் :
நரனுக் கமைத்த கொடி இரதச்சுதக் களவன்
அறைபுட்ப நற்றுளவன்
அர்ஜுனனுடைய ஹனுமக்கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், வெண்ணெய் திருடி, தேனுள்ள மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்தவன்..
இப்படி நம் நாதர் ராமாயண, மஹாபாரத நிகழ்ச்சிகளையும் ராம, க்ருஷ்ண அவதாரங்களையும் அனேக இடங்களில் போற்றிப் பாடுவார்.
By Ssriram mt - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=51539514
சொரூப தரிசனம்
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட
அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
நின்றன வ்யாத்தமும் வயலியி ல் வஞ்சியில் மேற்பயில்
சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே
எங்கும் நிறைந்த பரமேஶ்வரன் இந்த்ரன் உய்யும் பொருட்டு அருளின சரவணபவனே ! அறிவுத் தெளிவும் வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்கள் உள்ளவனே !
போராடிய க்ரௌஞ்ச மலையை ஊடுருவிச்செல்லும் படி எறிந்த திருக்கை வேல் கொண்டு போர்க்களத்தில் நடனம் செய்யும் மயிலில் ஏறியவனாய்,
அனைவரும் பயப்படும் படியாக அக்ரமத்தையும், விகடத்தையும் பயங்கரத்தையும் தந்த ராக்ஷஸ அஸுரர்களின் அஹங்காரம் அழிய, கொடியில் விளங்கிய கோழி கூவ,
தேவர்கள் எல்லோரையும் ஆட்கொள்ளவும், தேவர்களின் இடமாகிய பொன்னுலகில் மீண்டும் அவர்களைக் குடியேற்றிவைக்கவும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டியருளிய பெருமாளே !
உன்னுடைய எங்கும் நிறைந்துள்ள தன்மையையும் கீர்த்தியையும், வயலூரிலும் வஞ்சியிலும் பொருந்தியுள்ள உனது சொரூபத்தை இரவும் பகலும் மறக்கமாட்டேன்.
இப்படி 6 அருமையான திருப்புகழ்ப் பாடல்கள் அமைந்த தலம் கருவூர்.
No comments:
Post a Comment