5.திருப்புகழ் -96. நெடுங்களம்
97.அத்திப்பட்டு
நெடுங்களம் திருச்சியை அடுத்த திருவெறும்பூருக்கு அருகிலுள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 96வது ஸ்தலம்.
Public Domain, https://ta.wikipedia.org/w/index.php?curid=227144
இங்கு ஸ்வாமி பெயர் நித்ய கல்யாண சுந்தரேஶ்வரர், திருநெடுங்கள நாதர்.
அம்பாள் பெயர் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.புராண வரலாறு உள்ள இப்பதி சரித்திரகாலக் கல்வெட்டுக்கள் பல கொண்டது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
இது இடர்தீர்க்கும் பதிகம் எனப் போற்றப்படுகிறது.
www,thevaaram.org
இங்கு அருணகிரிநாதர் பாடிய ஒரு அருமையான பாடல் இருக்கிறது.
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனஎ ரிந்துபொடி யங்கமாகிப்
பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன்பதியு டன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல் விந்துநாதங்
கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நி றைந்தகழ லின்றுதாராய்
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரச கொங்கைகர முங்கொளாமல்
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள கங்குல்மேகம்
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
அம்பொனுரு மங்கைமண முண்டபாலா
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
அண்டரய னும்பரவு தம்பிரானே.
பஞ்சபுலன் = ஐம் புலன்கள்.- இந்த்ரியங்கள்- இவை வெளிமுகமாகச் செயல்படுவதால் நம்மை உலகில் பிணைக்கின்றன.
பழைய ரண்டுவினை = நல்வினை, தீவினை யாகிய இரு வினைகள். இவை மிகப் பழையகாலம் முதல் நம்மோடு வருகின்றன. இவ்வினைக்கேற்பவே நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம்.
பிணிகள் = இந்த உடல் பலவித பிணிகளுக்கு ஆளாகிறது.பிறவியே பெரும்பிணி என்பார்கள் பெரியோர்கள்.
இவை எரிந்துவிடவேண்டும் என்கிறார் அருணகிரியார்.
இப்படி இந்த்ரிய சேஷ்டைகளும் முன்வினைகளும் அற்றுப்போனால் அடியவர்களுடன் தொடர்பு ஏற்படும். (ஸத்ஸங்கம்). அதனால் தெய்வீக யோக முயற்சிகளை மேற்கொள்ளும் எண்ணம் வரும். இங்கு அருணகிரிநாதர் குண்டலினி (சிவ )யோகம் தழுவிய சில கருத்துக்களைச் சொல்கிறார்.
குண்டலினி யோகப்படி நம் உடலில் 6 சூக்ஷ்ம ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு தேவதைக்கு அதிஷ்டானமாக இருக்கிறது.
மூலாதாரம் - வினாயகர்
ஶ்வாதிஷ்டானம் - ப்ரஹ்மா
மணிபூரகம்------ விஷ்ணு
அனாஹதம் -------- ருத்ரன்
விஶுத்தி -------- மஹேஶ்வரன்
ஆக்ஞா --------- ஸதாஶிவன்
இவற்றைத் தாண்டியிருப்பது ஸஹஸ்ராரம். இது சிவ-சக்தி ஐக்ய நிலை.
இப்படி யோக முயற்சியால் ஆறு ஆதாரங்களிலும் அததற்குரிய தெய்வங்கள் விளங்க, ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாதம்-சிலம்பின் ஒலி, கழலின் ஒலி போன்று- கேட்கும் என்பது மரபு. இப்படி இவ்வித ஒலிகள் விளங்க, நீ மயிலின் பீது வந்து காட்சிதந்து, என் கவலைகளை ஒழித்து,அருட் பிரசாதம் நிறைந்த உன் திருவடிகளை இன்று எனக்குத் தந்து அரூள்புரிய வேண்டும் என நம் ஸ்வாமிகள் முருகனை வேண்டுகிறார்.
இவை இப்பாடலின் முதல் நான்கு அடிகளில் வரும் கருத்துக்கள்.
அடுத்த நான்கு அடிகளில் "அம்பொன் உரு மங்கையை" மணந்ததைச் சொல்கிறார். இது தெய்வயானை அம்மையைக் குறிக்கிறது. பொதுவாக வள்ளியை பச்சை நிறத்தவர் என்று சொல்வது மரபு. அதனால் பொன் உரு மங்கை என்பதை தெய்வானை என்று கொள்ள வேண்டும்.
திருநெடுங்களம் என்னும் பதியில் தேவர்களும் பிரம்மனும் வழிபட வீற்றிருக்கும் முருகன் அருள் புரியவேண்டு மென்று பாடுகிறர்.
[ இங்கு சொல்லிய யோக விஷயங்களை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்வது அபாயமானது. உண்மையான அனுபவமுள்ள நம்பத்தகுந்த பெரியவர்களிடமிருந்து நேரடியாகத் தெரிந்துகொள்ள வேணும்.]
அக்காலத்தில் பரவியிருந்த பலவித யோகங்கள், பிற நெறிகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவ்வப்போது சொன்னாலும் அருணகிரிநாதர் அவற்றிலெல்லாம் சிறிதும் ஈடுபாடு அற்றவர். பக்தி ஒன்றையே போற்றிப் பின்பற்றியவர்.
97.அத்திப்பட்டு
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 97வது தலம் அத்திப்பட்டு. இந்தப் பெயரில் தமிழ்நாட்டில் பல கிராமங்கள் இருக்கின்றன. அருணகிரிநாதர் பாடிய தலம் கந்தர்வகோட்டைக்கு அருகிலுள்ளது என்பது தணிகைமணி அவர்களின் கருத்து. இங்கு அருணகிரிநாதர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி லிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் மலராலே
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி லுறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு மிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை பெருமாளே.
முதல் மூன்று அடிகளில் வாழ்க்கையின் இறுதியில் உடல் எரிக்கப்பட்டு அழிந்துபோவதை விவரிக்கிறார்.
உடல் வற்றி உலர்ந்தது போலாகிறது. அறிவும் நீங்குகிறது. உயிர் பிந்தவுடன் சுற்றத்தார்கள் துக்கித்துக் கதறி அழுது, அழகுசெய்யப்பட்ட பல்லக்கில் பறைவாத்யங்கள் கொட்ட, உடலை எடுத்துப்போய் சுடுகாட்டிலிட்டு விறகுக்குகட்டையில் போட்டு எரிக்கின்றனர். வாயில் அரிசியிடுகின்றனர். அழகான துணிகளை எடுத்துவிடுகின்றனர். உடலின் மறைவான பகுதியெல்லாம் தீப்பிடிக்கின்றது.. இப்படி உடல் எரிந்துபோனதும் உறவினர்கள் வந்தவழியே திருப்பிப்போய் நீரில் குளித்து துக்கத்தையும் நீக்குகின்றனர். இப்படி இருந்தும் உறவைச்சொல்லி மக்கள் சுகமும் துக்கமும் கொள்கின்றனர்! மன்மதனுக்கு வசப்படுகிறனர்! இப்படிப்பட்ட அடிமையான தன்னை நினைத்து , சொர்க்கலோகத்துக்குப் போகும் வழி இதுதான் எனச் சொல்லி, உன் திருவடியைத் தந்தருளவேண்டும் எனப் பிரார்த்திக்கிறார்.
இந்த முதல் மூன்று வரிகள் வாழ்க்கை நிலையாமையை விளக்குகின்றன. அப்பரும் இதே கருத்தை திருஆனைக்கா பதிகத்தில் சொன்னார்.
"எத்தாய ரெத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்துதவுவா ரொருவரில்லைச் சிறுவிறகால் தீ மூட்டிச் செல்லா நிற்பர்".
வாழ்க்கைக்கு தெய்வமே துணையாக நிற்கும். "சிவனே உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்ல கண்டங்கொண்டடியேன் என்செய்கேனே".
அடுத்த நான்கு வரிகளில் முருகன் பெருமையைச் சொல்கிறார்.
இணையற்ற பர்வத ராஜன் பெற்ற பச்சை அழகு மயில்., திரிபுரத்தை எரிக்க பொன் வில்லைக் கையிலெடுத்தவள், அன்புடன் அதியமான தவத்தைச் செய்தவள், காஞ்சிப் பதியில் விளங்கும் புகழ்பெற்ற தேவி பார்வதி அருளிய புதல்வன்-
கொத்தான பத்துத் தலைகளும், இருபது தோள்களும் அற்றுவிழ, அம்பைச் செலுத்திய சக்ராயுதக்கடவுள். புள்ளிகளைக்கொண்ட ஆதிசேஷனாகிய பாம்பின்மேல் துயில்பவன், சுத்த பச்சை நிற மேக வண்ணனாகிய திருமாலின் மருகன் -
(பத்துத்தலை தத்தக் கணைதொடு... பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்)
அருமையான மரகத மயிலில் வீற்றிருப்பவன், ஒலிக்கும் கடல் வற்றவும், அசுரர் கூட்டம் கட்டொடு அழியவும்,தேவர் தலைவன் இந்த்ரன் சுகத்துடன் தன் பதியில் குடியேறவும் வைத்த மிக்க இளையவன் -
பத்துத் திக்கிலும் ஒளிவீசும் அழகிய கிரீடத்தை உடையவன், கயல் மீன்கள் தாவிக்குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்.
இந்த முருகன் பொற்கழல்கள் தரவேண்டும்!
இதுவே நமக்குத் துணையாவது. இதைக் கந்தரலங்காரத்திலும் உருக்கமாகச் சொல்கிறார்.
ஐவர்க்கிடம்பெறக் காலிரண்டோட்டி அதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே
ஐவருங்கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.
மக்களுக்கு நேரும் பெரிய துன்பம் ஜனன-மரண சுழற்சிதான். இதை "மஹதோ பயம்" - மிகப்பெரிய பயம் என்று கீதை கூறும். இதை நீக்க ஒரேவழி தெய்வ நினைவும் அருளும்தான். இதையே பல இடங்களில் அழுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதர்,
மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே
( உனைத் தினம் தொழுதிலன்)
இவ்வாறு நம் பயம் நீங்க உபாயம் சொல்கிறார் அருணகிரி ஆசான்.
சூலம் பிடித்து எமபாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கொரு காலும் அஞ்சேன், கடல் மீதெழுந்த
ஆலங்குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே.

ஆனபயபக்தி வழிபாடுபெறு முக்தியதுவாக நிகழ் பக்த சன வாரக் காரனும்......வேளைக்காரனேஎன்று பாடுகிறார். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment