2.திருப்புகழ் - 93.கற்குடி
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 93வது தலம் கற்குடி. இது இன்று உய்யக்கொண்டான் மலைஎன்று வழங்கப்படுகிறது. திருச்சியிலிருந்து வயலூர் போகும் வழியிலுள்ளது. இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம். பல புராண வரலாறுகள் கொண்ட ஸ்தலம். இங்கு ஸ்வாமிபெயர் உஜ்ஜீவனேஶ்வரர், உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், முக்தீஶர், கற்பகநாதர். அம்பாள் பெயர் அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை. ஒரு சிறிய குன்றின்மேல் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. முருகன் சன்னதி அடிவாரத்தில் இருக்கிறது. கல்வெட்டில் நந்திவர்ம மங்கலம்', 'ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்று இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பா.ஜம்புலிங்கம் [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons
திருஞான சம்பந்தர் பாடல்
விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே
ஏழாம் திருமுறை
.இவ்வாறு மூவராலும் பாடப்பெற்ற இத்தலத்தில் அருணகிரிநாதரின் இரு திருப்புகழ்ப் பாடல்கள் இருக்கின்றன, இரண்டிலும் மாதர் மயல் நீங்கி முருகன் அருள் பெற வேண்டுமென்று பாடுகிறார்.
கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்
கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக்
கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்
கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் ...... தருவாயே
(குடத்தைத் தகர்த்து )
அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுகைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே
( நெறித்துப் பொருப்பு)
இப்பாடலில் தீயவர்களை எமன் தண்டிக்கும் செயலை விளக்குகிறார்.
உலகத்தில் பொதுவாக நிகழும் தீமைகளை தம்மேல் ஏற்றிச் சொல்வது அடியார்களின் வழக்கம். தம்மை நாயேன், பேயேன் என்றெல்லாம் பெரியவர்கள் பாடுவார்கள். அருணகிரியாரும் அதுபோல் இங்கு பாடுகிறார். பெண் மோகத்தில் கிடந்த தன்னை எம தூதர்கள் எப்படியெல்லாம் வாட்டுவார்கள் என்று சொல்கிறார்.
இறுக்கிப் பிடித்துக் கட்டி..........= அழுத்திப் பிடித்தும், கட்டியும் உதைத்தும், துடிதுடிக்கப் பிடித்தும். இழுத்தும், மிதித்தும், எம தூதர்கள் சூழ்ந்துகொண்டு,
எனக்குக் கணக்குக் கட்டு.........= ( நான் செய்த பாபச்செயல்களின்) கணக்கை எனக்கு விரித்துக் காட்டியும், அந்த எண்ணிக்கைக்குத் தகுந்த படியே,
முறுக்கித் திருப்பிச் சுட்டு.........= என்னை முறுக்கியும் திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், என்னைத் திட்டியும், கலக்குவார்கள். அப்போது அதில் நான் அலையாமல்,
மொழிக்குத் தரத்துக்குற்ற..........= என்னுடைய மொழியையும் , தகுதியுள்ள தமிழையும் ஏற்றுக்கொண்டு முக்தியை அளிக்கும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன் மயிலில் ஏறி
உறுக்கிச் சினத்துச் சத்தி............= தண்டிக்கும் கோபம் கொண்ட சக்திவேலைக் கரத்தில் தாங்கி அடியேன் பக்கத்தில் வந்தருளுக!
உனை சொற் துதிக்க..............= உன்னைச் சொற்களினால் துதிப்பதற்கு ஏற்ற கருத்தைத் தந்தருளுவாயாக! எல்லா சித்திகளும் அமைந்துள்ள கற்குடியில் உறையும் பெருமாளே ! பக்தர்களின் பெருமாளே !
அருணகிரிநாதர் பல பாடல்களில் உயிர் பிரியும் போது மக்கள் படும் துன்பத்தையும், எம வாதனையையும் பல இடங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
என்று கந்தரலங்காரத்திலும் பாடுகிறார்.
நாம் செய்யும் தீயகர்மங்களை சித்ரகுப்தன் கணக்கு எழுதிவைத்துக் கொள்கிறான், அதற்குத் தகுந்தபடி எமலோகத்தில் தண்டனை தருவார்கள் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அதையே இங்கு அருணகிரியார் சொல்கிறார். இங்கு கர்மம் என்பது செய்கை மட்டும் அல்ல- மனத்தினால் எண்ணியவை, வாக்கினால் பேசியவை,, உடலால் செய்தவை ஆகிய மூவகையும் இதில் அடங்கும். அதனால் மனோ, வாக்கு காயங்கள் தூய்மையுடன் கடவுள் நினைவிலேயே தோய்ந்து இருக்கவேண்டும் என்பது கருத்து.
உயிர்கள் எமலோகத்தில் அனுபவிக்கும் துன்பங்களை "புவனத்தொரு" என்ற திரிசிராப்பள்ளிப் பாடலிலும் விவரித் திருக்கிறார்.
மரித் ...... திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய்
உயிர் பிரிந்ததும் அதை சூக்ஷ்ம உடலில் செலுத்தி, அதை இறுக்கிக் கட்டு, அடி குத்து என்றெல்லாம் கூறி அச்சம் விளைவித்து, அலறி அழவைத்து, துன்பப்படுத்தி, வாயில் மணலை இட்டு, நெருப்பில் தள்ளி, செக்கில் இட்டு ஆட்டி, வரிசையான பற்கள் உதிரும்படி அடித்து, எரியும் செப்புப் பதுமையைத் தழுவச் செய்து, அவரவர் உடலையே அறுத்து அந்த இறைச்சியை உண்ணச் செய்து, எலும்பை முறித்து, விலங்கு பூட்டித் துன்புறுத்தும் எம தண்டனை- ஆகிய இத் துயரத்தைத் தீர்த்தருளவேண்டும் என்று பாடுகிறார்.
இது அடியார்கள் நமக்குச் செய்யும் எச்சரிக்கை. நாம் இவற்றை நன்கு சிந்தித்து தீயவற்றை விலக்கி கடவுள் நினைவுடன் வாழவேண்டும் என்பதே அவர்கள் நமக்குத் தரும் அறிவுரை
உனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பை
உன்னைத் துதிப்பதற்குத் தகுந்த கருத்தைத் தரவேண்டும் என வேண்டுகிறார். இவர் எதை எதைப் பாடவேண்டும் என்பதை பொய்யாக் கணபதியே அவருக்குச் சொல்லிவிட்டார்! இதை சென்ற கட்டுரையில் கண்டோம்.
http://cpreecenvis.nic.in/Database/Coconut_Tree_982.aspx
.

வடந்திகழ் மென்முலை யாளைப்
பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர்
துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே.
முதல் திருமுறை
அப்பர் ஸ்வாமிகள் பாடல்
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
ஆறாம் திருமுறை
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடல்விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே
ஏழாம் திருமுறை
.இவ்வாறு மூவராலும் பாடப்பெற்ற இத்தலத்தில் அருணகிரிநாதரின் இரு திருப்புகழ்ப் பாடல்கள் இருக்கின்றன, இரண்டிலும் மாதர் மயல் நீங்கி முருகன் அருள் பெற வேண்டுமென்று பாடுகிறார்.
கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்
கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக்
கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்
கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் ...... தருவாயே
(குடத்தைத் தகர்த்து )
அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுகைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே
( நெறித்துப் பொருப்பு)
இப்பாடலில் தீயவர்களை எமன் தண்டிக்கும் செயலை விளக்குகிறார்.
உலகத்தில் பொதுவாக நிகழும் தீமைகளை தம்மேல் ஏற்றிச் சொல்வது அடியார்களின் வழக்கம். தம்மை நாயேன், பேயேன் என்றெல்லாம் பெரியவர்கள் பாடுவார்கள். அருணகிரியாரும் அதுபோல் இங்கு பாடுகிறார். பெண் மோகத்தில் கிடந்த தன்னை எம தூதர்கள் எப்படியெல்லாம் வாட்டுவார்கள் என்று சொல்கிறார்.
இறுக்கிப் பிடித்துக் கட்டி..........= அழுத்திப் பிடித்தும், கட்டியும் உதைத்தும், துடிதுடிக்கப் பிடித்தும். இழுத்தும், மிதித்தும், எம தூதர்கள் சூழ்ந்துகொண்டு,
எனக்குக் கணக்குக் கட்டு.........= ( நான் செய்த பாபச்செயல்களின்) கணக்கை எனக்கு விரித்துக் காட்டியும், அந்த எண்ணிக்கைக்குத் தகுந்த படியே,
முறுக்கித் திருப்பிச் சுட்டு.........= என்னை முறுக்கியும் திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், என்னைத் திட்டியும், கலக்குவார்கள். அப்போது அதில் நான் அலையாமல்,
மொழிக்குத் தரத்துக்குற்ற..........= என்னுடைய மொழியையும் , தகுதியுள்ள தமிழையும் ஏற்றுக்கொண்டு முக்தியை அளிக்கும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன் மயிலில் ஏறி
உறுக்கிச் சினத்துச் சத்தி............= தண்டிக்கும் கோபம் கொண்ட சக்திவேலைக் கரத்தில் தாங்கி அடியேன் பக்கத்தில் வந்தருளுக!
உனை சொற் துதிக்க..............= உன்னைச் சொற்களினால் துதிப்பதற்கு ஏற்ற கருத்தைத் தந்தருளுவாயாக! எல்லா சித்திகளும் அமைந்துள்ள கற்குடியில் உறையும் பெருமாளே ! பக்தர்களின் பெருமாளே !
அருணகிரிநாதர் பல பாடல்களில் உயிர் பிரியும் போது மக்கள் படும் துன்பத்தையும், எம வாதனையையும் பல இடங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
என்று கந்தரலங்காரத்திலும் பாடுகிறார்.
நாம் செய்யும் தீயகர்மங்களை சித்ரகுப்தன் கணக்கு எழுதிவைத்துக் கொள்கிறான், அதற்குத் தகுந்தபடி எமலோகத்தில் தண்டனை தருவார்கள் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அதையே இங்கு அருணகிரியார் சொல்கிறார். இங்கு கர்மம் என்பது செய்கை மட்டும் அல்ல- மனத்தினால் எண்ணியவை, வாக்கினால் பேசியவை,, உடலால் செய்தவை ஆகிய மூவகையும் இதில் அடங்கும். அதனால் மனோ, வாக்கு காயங்கள் தூய்மையுடன் கடவுள் நினைவிலேயே தோய்ந்து இருக்கவேண்டும் என்பது கருத்து.
உயிர்கள் எமலோகத்தில் அனுபவிக்கும் துன்பங்களை "புவனத்தொரு" என்ற திரிசிராப்பள்ளிப் பாடலிலும் விவரித் திருக்கிறார்.
மரித் ...... திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய்
உயிர் பிரிந்ததும் அதை சூக்ஷ்ம உடலில் செலுத்தி, அதை இறுக்கிக் கட்டு, அடி குத்து என்றெல்லாம் கூறி அச்சம் விளைவித்து, அலறி அழவைத்து, துன்பப்படுத்தி, வாயில் மணலை இட்டு, நெருப்பில் தள்ளி, செக்கில் இட்டு ஆட்டி, வரிசையான பற்கள் உதிரும்படி அடித்து, எரியும் செப்புப் பதுமையைத் தழுவச் செய்து, அவரவர் உடலையே அறுத்து அந்த இறைச்சியை உண்ணச் செய்து, எலும்பை முறித்து, விலங்கு பூட்டித் துன்புறுத்தும் எம தண்டனை- ஆகிய இத் துயரத்தைத் தீர்த்தருளவேண்டும் என்று பாடுகிறார்.
இது அடியார்கள் நமக்குச் செய்யும் எச்சரிக்கை. நாம் இவற்றை நன்கு சிந்தித்து தீயவற்றை விலக்கி கடவுள் நினைவுடன் வாழவேண்டும் என்பதே அவர்கள் நமக்குத் தரும் அறிவுரை
உனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பை
உன்னைத் துதிப்பதற்குத் தகுந்த கருத்தைத் தரவேண்டும் என வேண்டுகிறார். இவர் எதை எதைப் பாடவேண்டும் என்பதை பொய்யாக் கணபதியே அவருக்குச் சொல்லிவிட்டார்! இதை சென்ற கட்டுரையில் கண்டோம்.
http://cpreecenvis.nic.in/Database/Coconut_Tree_982.aspx
No comments:
Post a Comment